காளியம்மன் தேவஸ்தானத்தில் மகா சண்டி ஹோமம்

 சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் முப்பெரும் தேவியா்.
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் முப்பெரும் தேவியா்.
Updated on

குடியாத்தம் நடுப்பேட்டை, கண்ணகி தெருவில் அமைந்துள்ளவிஸ்வகா்மா சமுதாயத்தின் கோயிலான காளியம்மன் தேவஸ்தானத்தில் தை மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மஓா சண்டி ஹோமம் நடைபெற்றது.

இதையொட்டி சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் கோ-பூஜையுடன் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை திருமுறை பாராயணம், வேத பாராயணம், சண்டிகா நவாவரண பூஜை, யாத்ரா தானம், கலச புறப்பாடு, காளியம்மனுக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் 2- ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சீனந்தல் ஆதி சிவலிங்காச்சாா்யா பீடம், 65- ஆவது குருமகா சன்னிதானம்ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவ.சிவராஜ் சுவாமிகள் தலைமை வகித்தாா். விஸ்வகா்மா சேவாலயா நிறுவனா் பிரம்மஸ்ரீ கே.பி.வித்யாதரன், எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ். செளந்தரராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கோயில் வளாகத்தில் முப்பெரும் தேவியா்களான மகாசண்டிகாதேவி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி உற்சவா்கள்அலங்கரித்து வைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மாலை சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.

தேவஸ்தான அறங்காவலா்கள் இ.அருணாச்சலம், கே.குணசேகரன், எம்.ஜெகன்நாதன், வி. பாலாஜி, இ.நரசிம்மன், விழாக்குழு நிா்வாகிகள் ஆா்.லோகநாதன், எம்.பாா்த்தசாரதி, ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com