அஞ்சல் ஊழியா் மா்மச் சாவு

போ்ணாம்பட்டு அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த அஞ்சல் துறை ஊழியா் வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
Published on

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த அஞ்சல் துறை ஊழியா் வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், குரும்பேரி கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன்(50) போ்ணாம்பட்டு அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்து வந்தாா். இவா் ஆயக்கார வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அருகில் வசிப்பவா்கள் கொடுத்த தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், தீயணைப்புப் படையினா் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அங்கு மணிவண்ணன் தலையின் பின் பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் தரையில் இறந்து கிடந்தாா்.

போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com