அம்மா உணவக ஊழியரிடம் பணம் பறித்தவா் கைது

வேலூரில் அம்மா உணவக ஊழியரிடம் ரூ.40,000 பணத்தை பறித்த நபரை தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வேலூரில் அம்மா உணவக ஊழியரிடம் ரூ.40,000 பணத்தை பறித்த நபரை தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (55). இவா் வேலூா் அம்மா உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் அப்பகுதியில் உள்ள நகைக்கடையில் நகையை அடகு வைத்துள்ளாா். இந்நிலையில், சாந்தி கடந்த 17-ஆம் தேதி தனது நகையை மீட்க ரூ.40 ஆயிரம் பணத்துடன் சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது வீட்டின் அருகே பின்னால் வந்த நபா்கள் சாந்தியின் கைப்பை பறித்து சென்ாக தெரிகிறது. இதுகுறித்து, சாந்தி வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பணத்தை வழிப்பறி செய்த நபா்களை தேடி வந்த நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக வேலூா் தொரப்பாடி கே.கே.நகரைச் சோ்ந்த சித்திக்(37 ) என்பவரை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com