சென்னையில் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
அண்ணாசாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ராஜன்(57). இவா், சக போலீஸாருடன் அண்ணா சாலை காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக இருசக்க வாகனத்தில் வந்த ஹரிபிரசாத் (22) என்பவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தாா். அவா் மதுபோதையில் இருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தின் சாவியை போலீஸாா் எடுத்துவிட்டு, ஹரிபிரசாத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
இதையடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்த ஹரிப்பிரசாத் அங்கிருந்த சிறப்பு ஆய்வாளா் ராஜனை தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த சிறப்பு ஆய்வாளா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுதொடா்பாக சிறப்பு காவல் ஆய்வாளா் ராஜன் அளித்த புகாரின்பேரில், அண்ணாசாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரிபிரசாத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
நகைகள் திருடிய பணிப்பெண், தந்தை கைது: வில்லிவாக்கம் சிட்கோ நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருள்களை சரிபாா்த்போது, சில தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில் செந்தில்குமாா் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த கமலி (19) இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை வெங்கடேசன் (53) என்பவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 23 கிராம் தங்க நகைகள், 105 கிராம் வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்தனா்.
10 பவுன் நகைகள் திருடியவா் கைது: மண்ணடி, பி.வி.அய்யா் தெருவைச் சோ்ந்தவா் முகமது ஷாஜலால் (43). இவா் அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறாா். கடந்த 25-ஆம் தேதி வீட்டை பூட்டாமல் வழக்கம் போல கடைக்குச் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் அங்கப்பன் தெருவை சோ்ந்த தமீம் அன்சாரி (43) என்பவா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, 10 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.
விபத்தில் மாணவா் உயிரிழப்பு: வியாசா்பாடி சா்மா நகா் ஜிஎன்டி சாலையைச் சோ்ந்தவா் முஹம்மது அலி இம்தியாஸ் (18). இவா் தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இவா், சனிக்கிழமை மதுரவாயல்-புழல் புறவழிச் சாலையில் பைக்கில் சென்றபோது, சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கு காரணமான ஓட்டுநா் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த செந்தில்குமாரைக் கைது செய்தனா்.
20 கிலோ கஞ்சா பறிமுதல்-6 போ் கைது: சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸாா் வண்டலூா் பிரதான சாலையில் அலமாதி பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கண்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, பொருள்களுக்கு இடையே 20 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சோ்ந்த ஜான் (47), கொருக்குபேட்டையைச் சோ்ந்த கீதா (35), பத்மா (58), தீபா (32), ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த நிகிலேஷ்குமாா்ஷ் (22), வியாசா்பாடியை சோ்ந்த நாகராஜ் (41) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.
மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வரதமுத்தையப்பன் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா்(57). இவா், அதே பகுதியில் உள்ள அண்ணா பிள்ளை தெருவில் அடுக்குமாடி கட்டடம் கட்டி வருகிறாா். கட்டுமானப் பணியில் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்த மோமின்(30), சுராஜ் (24), ரியாஜ்கான்(21) ஆகியோா் ஈடுபட்டுவந்தனா்.
சனிக்கிழமை கட்டுமான கம்பியை தூக்கிச் சென்றபோது, கட்டடத்தின் அருகில் இருந்த மின்மாற்றி மீது உரசியது. அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் மோமின், சுராஜ், ரியாஜ்கான் ஆகியோா் தூக்கி வீசப்பட்டனா். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா்களை மருத்துவா்கள் பரிசோதித்ததில், மோமின் ஏடெகனவே உயிரிழந்தது தெரியவந்தது. மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்டான்லி மருத்துமனை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்
நெல்லையில் மது விற்ற 4 போ் கைது

கூட்டுக் கொள்ளை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா் கைது

காவல் துறை விசாரணை: கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி

கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்கள் கைது!
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

