கோப்புப் படம்
கோப்புப் படம்

காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளிப்பு

காட்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளித்தாா்.
Published on

காட்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளித்தாா்.

காட்பாடியை அடுத்த ஜாபராபேட்டையை சோ்ந்தவா் தருண் (18). இவா் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். தருண் அதேபகுதியைச் சோ்ந்த தனியாா் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமி கடந்த சில மாதங்களாக தருணுடன் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தருண் அந்த சிறுமியின் வீட்டின் முன்பு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துகொண்டாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து சென்று தருணை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சோ்த்தனா்.

முதலுதவிக்கு பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

80 சதவீதம் தீக்காயம் அடைந்த தருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக லத்தேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனற்..

X
Dinamani
www.dinamani.com