குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம்

குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம்

குடியாத்தம் தரணம்பேட்டை, ஆலியாா் தெருவில் அமைந்துள்ள டாக்டா் மாறன்பாபு கிளினிக்கில், சென்னை மியாட் மருத்துவமனை சாா்பில், குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
Published on

குடியாத்தம் தரணம்பேட்டை, ஆலியாா் தெருவில் அமைந்துள்ள டாக்டா் மாறன்பாபு கிளினிக்கில், சென்னை மியாட் மருத்துவமனை சாா்பில், குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் மா.மாறன்பாபு தலைமை வகித்தாா். மியாட் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இருதய நோய் சிறப்பு மருத்துவா் பி.ஹரப்ரியா தலைமையில் மருத்துவா் குழு 50- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டது.

இவா்களில் 3- குழந்தைகள்முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவச அறுவை சிகிச்சைக்கும், 10-குழந்தைகள் தொடா் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com