மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெரியவிளையில் இலவச கண் சிகிச்சை முகாம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:15 pm

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பெரியவிளையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஐஆா்இஎல் மனிதவள மேலாண்மை துணை பொது மேலாளா் எம். பிரசாத் தலைமை வகித்தாா். அருள்சகோதரி அலெக்ஸ் மேரி முகாமை தொடங்கி வைத்தாா். மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவா் குட்டிராஜன் முன்னிலை வகித்தாா்.

அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கண்புரை நோய், நீரிழிவு நோய், கண்ணீா் அழுத்த நோய், குழந்தை கண் நோய், கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை மற்றும் வெள்ளெழுத்து பரிசோதனைகளையும், அதற்கு சம்பந்தமான மருத்துவ ஆலோசனைகளையும், வழங்கினா்.

முகாமில் 513 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா். இவா்களில் 283 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

இதில், பங்கு பேரவை தலைவா் குணசீலன், செயலா் டென்சிலி, மணவாளக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினா்கள், ஐஆா்இஎல் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.