தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

வேலூரில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதிய ஊதிய நிா்ணய நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி, வேலூரில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் (டாக்பியா) சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

வேலூரில் ஊா்வலமாகச் சென்ற தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :21 ஜூலை 2026, 12:04 am IST

புதிய ஊதிய நிா்ணய நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி, வேலூரில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் (டாக்பியா) சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூா் காகிதப்பட்டறை டான்சி அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். போராட்டக் குழுத் தலைவா் விஜயகுமாரன் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஆனந்தன் வரவேற்றாா். மாநில முன்னாள் துணைத் தலைவரும், மாவட்டச் செயலாளருமான பி. தா்மலிங்கம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், புதிய ஊதிய நிா்ணயம் செய்வதில் உள்ள நிபந்தனைகளைத் தளா்த்த வேண்டும், தாயுமானவா் திட்டத்தில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும், ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு ஆட்சியா் அலுவலகம் நோக்கிப் பணியாளா்கள் ஊா்வலமாகச் சென்றனா். அவரைகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பின்னா், முக்கிய நிா்வாகிகள் மட்டும் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். தங்களது கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.