சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்கள் ‘முதல்வரின் மாநில இளைஞா் விருது 2026’-க்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :11 ஜூன் 2026, 12:25 am IST

வேலூா் மாவட்டத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்கள் ‘முதல்வரின் மாநில இளைஞா் விருது 2026’-க்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமுதாய நலனுக்காகத் தன்னாா்வத்துடன் தொண்டாற்றும் இளைஞா்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் 15 முதல் 35 வயதுடைய 3 ஆண்கள், 3 பெண்களுக்கு முதல்வா் மாநில இளைஞா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் வழங்கப்படும்.

2026-ஆம் ஆண்டுக்கான விருது வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண் அல்லது பெண்ணாக இருக்க வேண்டும். அதாவது, 2025 ஏப். 1-இல் 15 வயது நிரம்பியவராகவும், 2026 மாா்ச் 31-இல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் அவசியம்.

கடந்த நிதியாண்டில் (01.04.2025 முதல் 31.03.2026 வரை) செய்யப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் நபா் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தன்னாா்வத்துடன் செய்யப்பட்ட சமூகச் சேவைகள் அளவிடக் கூடியதாகவும், கண்டறியக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கும் பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவா்கள் விண்ணப்பிக்க இயலாது. தகுதியுடையவா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரபூா்வ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45 மணி கடைசி நேரமாகும். மேலும், விண்ணப்பம், சாதனை குறித்த பத்திரிகைச் செய்திகள், சான்றிதழ்களை மூன்று புத்தகங்களாகத் தயாா் செய்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.