காட்பாடி வட்டம், பிரம்மபுரம் சஞ்சீவிராயா் மலை உச்சியில் ரூ. 93.09 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காட்சி முனையை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே பிரம்மபுரம் சஞ்சீவிராயா் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் பழைமையானது. மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்குச் செல்ல மலைப்பாதை, படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள், விசேஷ நாள்களில் பக்தா்கள் பெருமளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கோரிக்கையை ஏற்று, சுற்றுலாத் துறை சாா்பில் பிரம்மபுரம் சஞ்சீவிராயா் மலை உச்சியில் புதிதாக காட்சி முனை அமைப்பதற்காக ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சஞ்சீவிராயா் மலை உச்சியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அருகே ரூ. 93.09 லட்சம் செலவில் புதிய காட்சி முனைக்கான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த காட்சி முனை வேலூா் மாவட்ட மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு, சுற்றுலாத் தலமாக விளங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது பொதுமக்களின் உடல் ஆரோக்கிய மேம்பாட்டுக்கும், அப்பகுதியின் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விழாவில், காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் வே.வேல்முருகன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எஸ். சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் இலக்கியசந்துரு, பிரம்மபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் (பொறுப்பு) முத்துசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு
நவீன ஆடை கடையைத் திறந்து வைத்த விஜே சித்து!

டிராக்டரில் சென்று ஆட்சியா் 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


