இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நவீன ஆடை கடையைத் திறந்து வைத்த விஜே சித்து!

விஜே சித்து கடைதிறப்பு குறித்து...

News image

விஜே சித்து

Updated On :12 ஏப்ரல் 2026, 11:00 pm IST

நடிகர் விஜே சித்து புதிய பியர் ஹவுஸ் கடையைத் திறந்து வைத்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி நவீன ஆண்கள் ஆடை பிராண்டான 'தி பியர் ஹவுஸ்' சென்னையில் தனது 2-வது ஷோரூமை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் துவங்கியுள்ளது.

இதனை, யூடியூப் பிரபலம் நடிகர் விஜே சித்து திறந்து வைத்தார். சுமார் 1,600 சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம், தென்னிந்தியாவில் இந்த பிராண்டின் வளர்ச்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த வடிவமைப்பு மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான ஆடைகளை இந்த பிராண்ட் வழங்குகிறது.

Story image

கடந்த 2017-ம் ஆண்டில் தன்வி மற்றும் ஹர்ஷ் சோமையா ஆகியோரால் தொடங்கப்பட்ட, 'தி பியர் ஹவுஸ்', இன்றைய நவீன இந்திய ஆண்களின் ஆடைத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பிராண்டாக விளங்கி வருகிறது. நேர்த்தியாக தைக்கப்பட்ட சட்டைகள், பிரபல நிறுவனங்களின் டீ- சர்ட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

திறப்புவிழாவைக் கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 3 ஆடைகள் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும், 5 ஆடைகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடியும், 7 ஆடைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இணை நிறுவனர்களான ஹர்ஷ் மற்றும் தன்வி சோமையா ஆகியோர் கூறுகையில், "சென்னையில் நாங்கள் திறந்துள்ள முதல் ஷோரூமுக்கு மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் திறக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது ஷோரூம் மூலம், சென்னை நகர மக்களுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இன்னும் அதிகமான மக்களிடம் எங்கள் பிராண்டை கொண்டு செல்வது குறித்து நாங்கள்பெருமையடைகிறோம்” என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.