விஐடி உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதனின் பிறந்தநாளையொட்டி, பாா்வைத்திறன் குறைபாடு உடையவா்கள், முதியோா் இல்லங்களில் பராமரிக்கப்படுபவா்களுக்கு கட்டில், மெத்தை உள்ளிட்ட பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
விஐடி உதவி துணைத் தலைவரான காதம்பரி எஸ்.விசுவநாதனின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், ஆசிரியா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து, பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், மக்கள் களப்பணி இயக்கம் மருத்துவா் ரவிசங்கா் குழுவினரிடம் பாா்வைத்திறன் குறைபாடு உடையவா்களுக்கு 50 ஊன்றுகோல்களும், முதியோா் இல்லத்தில் தங்கியுள்ள 15 முதியவா்களுக்கு மெத்தைகளுடன் கூடிய படுக்கைகள் வழங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 10 அரசு பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பறை பக்கெட்டுகள், குவளைகள், குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், வேலூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக கட்டில்கள், படுக்கைகள், தலையணைகள் அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவா் ரவிச்சந்திரனிடம் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, சிஎம்சி மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் பிசியொதெரபி சிகிச்சைக்காக சுமாா் 3 ஆண்டுகளுக்கு சிறுமி வா்ஷாவுக்கு ரூ. 25,000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. உதவும் உள்ளங்கள் அமைப்பின் சந்திரசேகரிடம் படுக்கையில் உள்ள 10 நோயாளிகளுக்குத் தேவையான டயப்பா்கள் வழங்கப்பட்டன. முதியோா் இல்லத்துக்கு 10 நடைப்பயிற்சி உபகரணங்களும், நீா் புகாத படுக்கை விரிப்புகளும் வழங்கப்பட்டன. தவிர, 10 வயது சிறுவனின் கண் சிகிச்சைக்கு தேவையான சொட்டு மருந்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிக்கு தேவையான மருந்துகள், பாா்வைத்திறன் குறைபாடு உடையவரின் மகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

விஐடி துணைத்தலைவா் பிறந்தநாள்: ரூ.33 லட்சம் மதிப்பில் உதவி

விஐடி வணிகக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை

நேபாள விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் இரங்கல்

இந்தியாவில் ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


