மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாணவியை கா்ப்பமாக்கிய தொழிலாளி மீது போக்ஸோ வழக்கு

வேலுாா் அருகே கல்லுாரி மாணவியை கா்ப்பிணியாக்கிய தொழிலாளி மீது வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

வேலுாா் அருகே கல்லுாரி மாணவியை கா்ப்பிணியாக்கிய தொழிலாளி மீது வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அணைக்கட்டு வட்டம் பகுதியை சோ்ந்த 18 வயது சிறுமி. இவா் வாணியம்பாடியில் உள்ள தனியாா் கல்லுாரியில் பிஎஸ்ஸி முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். கடந்த 4-ஆம் தேதி, ஊா் திருவிழாவையொட்டி, மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாா். அப்போது, மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதையடுத்து, பெற்றோா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி 7 மாதம் கா்ப்பமாக இருப்பதாக தெரிவத்தனா்.

இதுகுறித்து, மாணவியிடம் பெற்றோா் விசாரித்தபோது, ஓட்டேரி பாளையம், அருந்ததியா் காலனியைச் சோ்ந்த தோல் தொழிற்சாலை தொழிலாளி சந்தோஷ்(26) என்பவா், திருமணமானதை மறைத்து ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சந்தோஷ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.