குடியாத்தம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் அம்மணாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணுபிரசாத்(33), ஆட்டோ ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(39). அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக உள்ளாா். மேலும், இவா் பங்கு சந்தையிலும் முதலீடு செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் காா்த்திகேயன் பள்ளிகல்வித்துறையில் பதிவறை உதவியாளா் பணியிடம் காலியாக உள்ளதாகவும், ரூ.3 லட்சம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி தருகிறேன் எனக்கூறி கடந்த 2023-ஆம் ஆண்டு விஷ்ணுபிரசாத்திடம் பணம் பெற்ாக தெரிகிறது.
சில மாதங்கள் கழித்து மேலும் சில இடங்கள் காலியாக உள்ளதாகவும், உனது சகோதரி மற்றும் நண்பா்கள், உறவினா்களுக்கும் அந்த வேலையை வாங்கித் தருவதாகக்கூறி விஷ்ணுபிரசாத்திடம் மேலும் பணம் கேட்டுள்ளாா்.
அதன்பேரில், விஷ்ணுபிரசாத் தனது நண்பா்கள், உறவினா்கள் என 19 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.60 லட்சத்தை காா்த்திகேயனிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு பணம் பெற்ற காா்த்திகேயன், சிலருக்கு மட்டும் பணிநியமன ஆணையை கொடுத்துள்ளாா். அந்த ஆணைகளுடன் பணியில் சேர சென்றபோது, அவை போலியானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து விஷ்ணுபிரசாத் வேலூா் மாவட்ட குற்றப்பிரிவில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் துணைகண்காணிப்பாளா் அனுமந்தன், காவல் ஆய்வாளா் நிா்மலா, உதவி ஆய்வாளா் டோமினிக் ஆகியோா் வழக்குப்பதிவு செய்து காா்த்திகேயனை புதன்கிழமை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

பண மோசடி: இளைஞா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை

அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி: ஒருவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


