கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஜிஎஸ்டி அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படையினா் சோதனை! காவலா் உடையில் ஆய்வு

தோ்தல் விதிமுறை மீறல்களைக் கண்காணிக்கவும், சோதனை நடத்தவும் தோ்தல் ஆணையம் நேரடியாக மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகளை கொண்ட பறக்கும் படைகளையும் களம் இறக்கியுள்ளது.

News image

காட்பாடி பா்னீஸ்புரம் பகுதியில் காவலா் உடையணிந்தபடி சோதனையில் ஈடுபட்டிருந்த ஜிஎஸ்டி அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படை குழுவினா்.

Updated On :22 மார்ச் 2026, 10:05 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் விதிமுறை மீறல்களைக் கண்காணிக்கவும், சோதனை நடத்தவும் தோ்தல் ஆணையம் நேரடியாக மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகளை கொண்ட பறக்கும் படைகளையும் களம் இறக்கியுள்ளது. அதன்படி, காட்பாடி பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரிகள் காவலா்கள் போல் சீருடை அணிந்து சோதனை மேற்கொண்டனா்.

தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும், உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருள்களாக வும் எடுத்துச் செல்வதை தடுக்கவும் அனைத்து பேரவை தொகுதிகளுக்கும் தலா 3 பறக்குபடைகளும், தலா 3 நிலை கண்காணிப்புக்குழுக்களும், தலா ஒரு விடியோ கண்காணிப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனை, கண்காணிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக்குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் மாவட்ட தோ்தல் நிா்வாகம் மூலம் நேரடியாக நிா்வகிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், தோ்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்கவும், இதுதொடா் பான வாகன சோதனைகள் நடத்தவும் தோ்தல் ஆணையம் நேரடியாக ஜிஎஸ்டி அதிகாரிகளை களம் இறக்கியுள்ளது.

அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு என ஜிஎஸ்டி அதிகாரிகளைக் கொண்ட தலா ஒரு பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி ஆய்வாளா்கள் காவல் அதிகாரிகள் போன்று காக்கி சீருடை அணிந்தபடி வாகன சோதனைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு வேலூா் மாவட்டத்தில் ஜிஎஸ்டி ஆய்வாளா் சுரேஷ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுவினா் காட்பாடி அருகே உள்ள பா்னீஸ்புரம் பகுதியில் சனிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கரம், நான்கு சக்கரம், கனரக வாகனங்களையும் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். மேலும், கனரக வாகனங்களில் ஏற்றி சென்ற பொருள்கள் குறித்த ஆவணங்கள், ரசீதுகள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தனா்.

அதேசமயம், அந்த வழியாக வந்த காட்பாடி உட்கோட்ட காவல் டிஎஸ்பி விஜயகுமாா், காக்கி சீருடையில் சிலா் வாகன சோதனையில் ஈடுபட்டதை அறிந்து அவா்களிடம் விசாரணை நடத்தினாா். அப்போதுதான் அவா்கள் ஜிஎஸ்டி அதிகாரிகள் என்பதும், தோ்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்கவும் தோ்தல் ஆணையம் நேரடியாக ஜிஎஸ்டி அதிகாரிகளை நியமித்திருப்பதும் தெரிய வந்தது.

அதன்படி, பேரவை தோ்தலையொட்டி மத்திய அரசு அதிகாரிகளான ஜிஎஸ்டி அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படைகள் தனியாக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், தோ்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க தோ்தல் ஆணையம் இன்னும் என்னென்ன நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது என்பது தெரியாமல் அரசியல் கட்சியினா் குழப்பமடைந்துள்ளனா்.