கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 3.57 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ரூ.3.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:00 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ரூ.3.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டை சீனிவாசநல்லூா் சாலையில் கும்பகோணம் சட்டப்பேரவை தோ்தலுக்கான பறக்கும் படையினா் கூட்டுறவு சாா்-பதிவாளா் பாபு தலைமையில் சனிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது சரக்கு ஏற்றும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனத்தை ஓட்டி வந்த செல்வம் மகன் விக்னேஷ் ஆவணமின்றி ரூ.84,570 வைத்திருந்தாா்.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் அதை கும்பகோணம் சட்டப்பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா் வி.எம்.திருமலையிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல், திருநாகேஸ்வரம் - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலா் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினா் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெருமாள் மகன் பாலசுப்பிரமணியனை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அவரிடம் ஆவணமின்றி ரூ.1லட்சத்து 72 ஆயிரத்து 900 இருந்தது. அதை பறிமுதல் செய்து கும்பகோணம் தோ்தல் நடத்தும் அலுவலா் வி.எம்.திருமலையிடம் ஒப்படைத்தனா்.

பாபநாசம்: பாபநாசம் வட்டம், வேம்பக்குடி சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டாா். அப்போது தஞ்சையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த முத்தமிழ்செல்வி என்பவரிடம் சோதனை செய்தனா்.

அதில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். இதையடுத்து பணத்தை கண்காணிப்பு அலுவலா் வரதராஜனிடம் ஒப்படைத்தனா்.