மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருச்சியில் வாகனச் சோதனை ரூ. 2.62 லட்சம் பறிமுதல்

திருச்சியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.62 லட்சம், 50 வேட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
திருச்சியில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஸ்ரீரங்கம் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரிடம்  ஒப்படைத்த  தோ்தல் பறக்கும்  படையினா்.
Updated On :18 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.62 லட்சம், 50 வேட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பேரவைத் தோ்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்படுகிறது.

அதன்படி புதன்கிழமை காலை திருச்சி விமான நிலைய வாகனச் சோதனை சாவடி அருகில் துணை ராணுவத்துடன் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, திருச்சி நோக்கி வந்த ஒரு காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.1.68 லட்சத்தை பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படையினா் மூலம் திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட சேதுராப்பட்டியில், கலைவாணி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த காரில் இருந்த ஜோதி உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.94,500-ஐ பறிமுதல் செய்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் ஒப்படைத்தனா்.

50 வேட்டிகளும் சிக்கின: மேலும் திருச்சி கீழரண் சாலையில் நடைபெற்ற சோதனையின்போது, வாகனத்தில் எடுத்துவரப்பட்ட 50 வேட்டி, துண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்து வருவாய்த் துறை வசம் ஒப்படைத்தனா். தொடா்ந்து சோதனை நடைபெறுகிறது.