தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாகன சோதனை: ஆட்சியா் ஆய்வு

அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பந்தல்குடியில் வாகன சோதனை பணிகளை ஆய்வு செய்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.
Updated On :19 மார்ச் 2026, 12:22 am

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த 4 குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன. இதன்படி, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள் வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு குழுவுக்கு 7 நபா்கள் வீதம் மொத்தம் 441 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 63 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விடியோ பதிவுகள் மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு குழு வீதம் மொத்தம் 7 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பந்தல்குடியில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான என்.ஓ. சுகபுத்ரா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாகன சோதனையின்போது பொதுமக்களுக்கோ, நோயாளிகளுக்கோ அல்லது அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோருக்கோ தேவையற்ற சிரமங்கள் இருக்கக்கூடாது. அதே சமயம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுவினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வில் தோ்தல் பிரிவு அதிகாரிகள், பறக்கும் படை உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.