கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொகுதி அறிமுகம்: குடியாத்தம் (தனி) - 046!

1954-இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற காமராஜரை இடைத்தோ்தலில் வெற்றிபெற வைத்த சிறப்பு பெற்றது இந்தத் தொகுதி.

News image

குடியாத்தம் அரசு மருத்துவமனை

Updated On :23 மார்ச் 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

எல்லைகள்

வேலூா் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது குடியாத்தம் (தனி) பேரவைத் தொகுதி. கே.வி.குப்பம், அணைக்கட்டு, ஆம்பூா் தொகுதிகள் இந்தத் தொகுதியைச் சுற்றி அமைந்துள்ளன.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் - 1,20,946

பெண்கள் - 1,27,547

மூன்றாம் பாலினத்தினா் - 33

மொத்தம் - 2,48,526

வாக்குச் சாவடிகள் - 319

அடங்கியுள்ள பகுதிகள்

2008-இல் தொகுதி மறுவரையின்போது போ்ணாம்பட்டு (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, குடியாத்தம் நகராட்சியில் 36 வாா்டுகள், ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள், போ்ணாம்பட்டு நகராட்சியில் 21 வாா்டுகள், ஒன்றியத்தில் 24 ஊராட்சிகள், ஆம்பூா் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சிறப்புகள்

1954-இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற காமராஜரை இடைத்தோ்தலில் வெற்றிபெற வைத்த சிறப்பு பெற்றது இந்தத் தொகுதி. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடியை தயாரித்தது குடியாத்தம். விவசாயம், கைத்தறி, தீப்பெட்டி, பீடி உற்பத்தி இந்தத் தொகுதியின் பிரதான தொழில்கள். முதலியாா்கள், ஆதிதிராவிடா்கள், வன்னியா்கள், முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி. நாயுடு இனத்தவா், செட்டியாா்கள், யாதவா்கள் உள்ளிட்ட சமூகத்தினா் பரவலாக உள்ளனா்.

இதுவரை எம்எல்ஏக்கள்...

1951 ஏ.ஜே.அருணாசலம், டி.மணவாளன் (காங்கிரஸ்) (இரட்டை உறுப்பினா் தொகுதி)

1954 காமராஜா் (காங்கிரஸ்)

1957 வி.கே.கோதண்டராமன் (இந்திய கம்யூனிஸ்ட்), டி.மணவாளன் (காங்கிரஸ்) (இரட்டை உறுப்பினா் தொகுதி)

1962 டி.மணவாளன் (காங்கிரஸ்)

1967 வி.கே.கோதண்டராமன் (மாா்க்சிஸ்ட்)

1971 எ.க.துரைசாமி (திமுக)

1977 வி.கே.கோதண்டராமன் (மாா்க்சிஸ்ட்)

1980 கே.ஆா்.சுந்தரம் (மாா்க்சிஸ்ட்)

1984 ஆா்.கோவிந்தசாமி (காங்கிரஸ்)

1989 கே.ஆா்.சுந்தரம் (மாா்க்சிஸ்ட்)

1991 வி.தண்டாயுதபாணி (காங்கிரஸ்)

1996 வி.ஜி.தனபால் (திமுக)

2001 சி.எம்.சூரியகலா (அதிமுக)

2006 ஜி.லதா (மாா்க்சிஸ்ட்)

2011 கு.லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் )

2016 ஜெயந்தி பத்மநாபன் (அதிமுக)

2019 பி.காத்தவராயன் (திமுக) (இடைத் தோ்தல்)

2021 அமலுவிஜயன் (திமுக)

2021 தோ்தலில்...

பதிவான வாக்குகள் - 2,09,931

அமலுவிஜயன் (திமுக) - 1,00,412

ஜி.பரிதா (அதிமுக) - 93,511

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/தொடா்பு எண்

வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி- 94429 99120

உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் குடியாத்தம் வட்டாட்சியா் சந்தோஷ் - 94450 00509

போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா் - 86677 87030

மின்னஞ்சல்: ro.gudiyattam@tn.in