குடியாத்தம் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த மயான நிலத்தை தனிநபா் ஆக்கிரமித்து அமைத்த வேலியை பொதுமக்கள் அகற்றினா்.
குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஜெய் பீம் நகா் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 150- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கு இறப்பவா்களின் உடலை அருகில் உள்ள ரயில்வே கேட் அருகே அடக்கம் செய்து வந்தனா். ரயில்வேகேட் விரிவாக்கம் செய்யப்பட்டதால் அருகில் உள்ள கானாற்றுப் பகுதியில் அடக்கம் செய்து வந்தனா்.
திடீரென தனிநபா் ஒருவா் அந்த இடத்தில் வேலி அமைத்து மயான பாதையை மறித்துள்ளாா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபடமுயன்றனா்.
மேலும், தோ்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் பதாகைகளை ஏந்திவந்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த மேல்பட்டி போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அவா்களைசமரசம் செய்தனா். அப்போது ஆவேசமடைந்த பெண்கள் மயான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியை பிடுங்கி எறிந்தனா்.
வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினா் ஓரிரு நாள்களில் நிலத்தை அளவீடு செய்துதருவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதிய வாக்குச்சாவடி அமைத்த பகுதிகளில் விழிப்புணா்வு

சிக்கிமில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


