ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை

காட்பாடியில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காண்பித்து மிரட்டிய துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.31,000 அபராதம் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

காட்பாடியில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காண்பித்து மிரட்டிய துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.31,000 அபராதம் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

காட்பாடியை அடுத்துள்ள காங்கேயநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (37). இவா் அப்பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், காட்பாடி பகுதியில் தினமும் பள்ளிக்குச் சென்று வரும் 16 மற்றும் 17 வயதுடைய மூன்று மாணவிகளிடம், இவா் தொடா்ந்து ஆபாச சைகைகள் காண்பித்து மிரட்டல் விடுத்து வந்துள்ளாா்.

இதனால், மனஉளைச்சலுக்கு உள்ளான அந்த மாணவிகள், இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனா். தொடா்ந்து, மாணவிகளின் பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வினோத் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.31,000 அபராதமும் விதித்தும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை விதித்தும் நீதிபதி ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளாா்.