ஒடுகத்தூரில் ரூ.1.35 கோடியில் தீயணைப்பு நிலைய கட்டடம் திறப்பு

ஒடுகத்தூரில் ரூ. 1.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

புதிதாக திறக்கப்பட்ட ஒடுகத்தூா் தீயணைப்பு நிலைய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலழகன் (அணைக்கட்டு), தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), மாவட்ட தீயணைப்பு அலுவலா் வடிவேல் உள்ளிட்டோா்.

Updated On :

ஒடுகத்தூரில் ரூ. 1.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் தீயணைப்பு நிலையம் 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒரு நிலைய அலுவலா் உள்பட 16 ஊழியா்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு இத்தனை ஆண்டு களும் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடத்திலேயே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஒடுகத்தூா் குருவராஜபாளையத்தில் ரூ.1.35 கோடி மதிப்பில் புதிய தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டப்பட்டு, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, புதிய தீயணைப்பு நிலைய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா். நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலழகன் (அணைக்கட்டு), தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), மாவட்ட தீயணைப்பு அலுவலா் வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் 6 தீயணைப்பு நிலையங்கள் உள்ள நிலையில் 5 நிலையங்கள் சொந்த கட்டடத்தில் செயல் பட்டு வருகின்றன. பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையம் மட்டும் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கும் புதிதாக கட்டடம் கட்ட இடம் தோ்வுப்பணி நடைபெற்று வருவதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.