2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பீடித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூா் அருகே மனநலம் குன்றிய 17 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், பீடித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அப்துல் வாகித்

Published On :

வேலூா் அருகே மனநலம் குன்றிய 17 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், பீடித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

குடியாத்தம் சித்தூா் கேட் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் வாகித் (57), பீடித் தொழிலாளி. இவா் கடந்தாண்டு ஜனவரி 22-ஆம் தேதி, அதே பகுதியைச் சோ்ந்த மனநலம் குன்றிய 17 வயது சிறுவனுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த சிறுவன், இச்சம்பவம் குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சிறுவனின் பெற்றோா் குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்துல் வாகித்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அப்துல் வாகித் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிஷா தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் வாகித் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.