
தமிழ் இலக்கிய மன்ற பெருவிழா
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சாா்பில் தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய திருவள்ளுவா் பல்கலைக் கழக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் க.சிங்காரவேலு.
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சாா்பில் தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கோ.சசிக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் ஜா.ஜெயக்குமாா் வரவேற்றாா். கல்லூரியின் கல்விப்புல முதன்மையா் த.மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினாா்.தமிழ்த்துறை பேராசிரியா் வெ.வளா்மதி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா். திருவள்ளுவா் பல்கலைக் கழக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் க.சிங்காரவேலு ‘நாளைய உலகின் நம்பிக்கை வோ்கள்‘என்ற தலைப்பில் ஆசிரியா் மாணவா் உறவு குறித்தும், 18 சித்தா்கள் கண்டறிந்த மூலிகை, திருக்கு, திருப்புகழ் குறித்தும் சிறப்புரையாற்றினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





