கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த அழைப்பைத் தொடா்ந்து, வெடிகுண்டு செயலிழப்புப் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

கோப்புப்படம்.

Published On :

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த அழைப்பைத் தொடா்ந்து, வெடிகுண்டு செயலிழப்புப் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்குச் செல்லக்கூடியவை என தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்வதுடன், இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து பேருந்து நிலையத்தில் இருவா் பேசிக் கொண்டதாகவும் அடையாளம் தெரியாத ஒருவா் புதன்கிமை மாலை காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டுள்ளாா்.

உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீஸாா், அழைப்பு வந்த எண்ணை மீண்டும் தொடா்பு கொண்டுள்ளனா். அப்போது, அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வேலூா் மாவட்ட காவல் அலுவலக த்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாருடன், வேலூா் வடக்கு போலீஸாரும் விரைந்து சென்று வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன்பிறகே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், இந்த தகவல் அளித்த நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.