கோவை, ஆக. 27: பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோவை மாநகரில் 122 விநாயகர் சிலைகள் முத்தண்ணன் குளத்தில் வியாழக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
இந்து மக்கள் கட்சி சார்பில் காலை 10 மணிக்கு ராஜவீதி தேர்நிலைத் திடலில் 14 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உப்பார வீதி, தாமஸ் வீதி, ரங்கே கவுடர் வீதி, சுக்ரவார் பேட்டை, சலிவன் வீதி, காந்திபார்க், தடாகம் ரோடு வழியாக முத்தண்ணன் குளம் சென்று அங்கு விசர்ஜனம் செய்யப்பட்டன.
சிவசேனா சார்பில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆர்.எஸ்.புரத்தில் இருந்து 14 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு டி.பி.ரோடு, காமராஜபுரம், புரூக்பாண்ட் ரோடு, தேவாங்கபேட்டை, பூ மார்க்கெட், ரங்கே கவுடர் வீதி, டி.கே.வீதி, இடையர் வீதி, வெள்ளி விநாயகர் கோயில், கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி, தடாகம் ரோடு வழியாக முத்தண்ணன் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
இந்து முன்னணி சார்பில் மாலை 4.30 மணிக்கு தெப்பக்குளம் மைதானத்தில் இருந்து 64 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு லிங்கப்ப செட்டிவீதி, வி.சி.வி.லே-அவுட், தேவாங்கபேட்டை ரோடு, பூ மார்க்கெட், ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, சலிவன் வீதி, காந்திபார்க், வெங்கிடகிருஷ்ணா ரோடு, தடாகம் ரோடு வழியாக முத்தண்ணன் குளம் சென்றடைந்து அங்கு விசர்ஜனம் செய்யப்பட்டன.
இந்து முன்னணியினர் ராணுவ சீருடை போன்ற உடை அணிந்தும், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை நிற உடைகள் அணிந்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
அனுமன் சேனா சார்பில் மாலை 4.30 மணிக்கு வி.கே.கே.மேனன் ரோட்டில் இருந்து 30 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சின்னசாமிநாயுடு ரோடு, நூறடி ரோடு, சக்தி ரோடு சந்திப்பு, வடகோவை, சிந்தாமணி சந்திப்பு, புரூக்பாண்ட் ரோடு, தேவாங்கபேட்டை, வி.சி.வி.லே-அவுட், ரங்கே கவுடர் வீதி, வைசியாள் வீதி, சலிவன் வீதி, சுப்பிரமணியம் ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு வழியாக முத்தண்ணன் குளம் அடைந்து அங்கு விசர்ஜனம் செய்யப்பட்டன. மாநகரில் மொத்தம் 122 சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசர்ஜனம் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







