உடுமலை,அக்.14: சுற்றுப்புற சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு கரு த்தரங்கு உடுமலை அரசு கலை கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதல்வர் மா.தனசேகரபாண்டியன்(பொறுப்பு) தலைமை வகித்தார்.
கோவை சுற்றுச்சூழல் குழும கோட்ட செயற்பொறி யாளர் ஆர்.இளங்கோவன் சிறப்பு விருந்தினரை அறிமு கப்படுத்தி பேசினார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் கோ.நம்மாழ் வார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது:
சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொறுப்பு இளைய சமுதாயத்திற்கு உள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாக்க மாணவர்களை கொண்டு பெரிய அளவில் ஒரு இயக்கம் தொடங்க வேண்டும்.
நவீன பொருளாதார வளர்ச்சி மனிதர்களை உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஏற்ப எந்த செயலையும் செய்யவில்லை. நம் முன்னோர்களான தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ் வாழ்வை உலக மொழிகளில் மொழி பெயர்த்து பரப்பும்போது உலகம் நலமடையும். ரசாயண உரங்கள் பயிரையும் நிலத்தையும் சூழலை யும் அழித்து விட்டது. இதனால் புவி வெப்பமடைந்து உ லகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனைத் தெ ரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். தெரிந்து கொள்ளும் முயற்சி செய்தால் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். அனைத்தையும் அறிந்து கொள்ள முடிந்தால் விழிப்புணர்வு உண்டாகும். இயற்கையை பாதுகாக்கும் விழிப்புணர்வு மிக மிக முக்கியமான ஒன்று. மரம் செடி கொடிகள் பிற உயிர்களின் பசியை போக்கித்தான் வளர்கின்றன. ஓரளவுடைய தாவரங்களிலிருந்து ஆறறிவுடைய மனிதன் இதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
முனைவர் கு.கிருஷ்ணன், பேராசிரியர் கு.மாரிசாமி, மசுமை மாறா இயக்க செயலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே சீர்குலைக்கும் மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

