போராட்டக் களத்தில் ஜவுளி தொழில்துறையினர்

திருப்பூர், ஆக.23: பருத்தி ஏற்றுமதிக்கு அக். 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் உள்நாட்டில் பஞ்சு விலை கிலோ | 100ஆக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை வராமல் தடுக்கவு
Updated on
2 min read

திருப்பூர், ஆக.23: பருத்தி ஏற்றுமதிக்கு அக். 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் உள்நாட்டில் பஞ்சு விலை கிலோ | 100ஆக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை வராமல் தடுக்கவும், உள்நாட்டிலுள்ள பின்னலாடை உள்ளிட்ட ஜவுளித்தொழில் நிறுவனங்களுக்கு தடையின்றி பஞ்சு, நூல் கிடைக்கச் செய்யவும் அனைத்து ஜவுளித்தொழில்துறையினரும் போராட்டக் களத்தில் இறங்கத் தயாராகியுள்ளனர்.

 பஞ்சு ஏற்றுமதிக்கு அக். 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என்றும், செப். 1 முதல் அதற்கான முன்பதிவு செய்யப்படும் என்றும் மத்திய தொழில் வர்த்த அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அயல்நாட்டு பொது வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதனால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி உள்பட அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 இந்த அறிவிப்பு வெளியான பிறகு நாளுக்குநாள் பஞ்சு விலை கடுமையான உயர்ந்து வருகிறது. அதன்படி, கடந்த ஆக. 16ம் தேதிக்கு முன்பு வரை | 30,800ஆக இருந்த ஒரு காண்டி (355.54 கிலோ) பஞ்சு விலை அறிவிப்பு வெளியான ஆக.17ல் |  31,300ஆகவும், 18ல் ரூ.32,000, 19ல் | 32,500, 21ல் | 32,700 ஆக உயர்ந்து திங்கள்கிழமை (ஆக.23) | 33 ஆயிரத்தை தொட்டது. பஞ்சு விலை இன்னும் அதி கரிக்கக் கூடும் என்றும் தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 போட்டிநாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கனமழை, நிலச்சரி உள்ளிட்டவற்றால் பருத்தி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இச் சூழ்நிலையில் இந்திய பருத்தியையே எதிர்பார்த்துள்ள அந்நாடுகள் அக். 1க்கு பிறகு தரமான பஞ்சுகளை இந்தியாவில் இருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் பஞ்சு விலை ஒரு கிலோ | 100 என்ற அடிப்படையில் உயரக்கூடும் என்றும், அவ்வாறு, பஞ்சு விலை உயரும் போது நினைத்து பார்க்க முடியாத அளவில் நூல் விலை உயர்த்தப்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

 பின்னலாடை உள்ளிட்ட அனைத்து ஜவுளித்தொழில் நிறுவனங்களுக்கும் ஏற்பட உள்ள இந்நெருக்கடி நிலை கருதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளித்தொழில் சங்கங்கள் கடந்த சனிக்கிழமை கலந்தாலோசனை நடத்தியுள்ளன.

 தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உள்நாட்டு ஜவுளித்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், உள்நாட்டு தேவைபோக மீதமுள்ள பஞ்சுகளை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.

 தொடர்ந்து அவர் கூறுகையில், உள்நாட்டு ஜவுளித்தொழில் நிறுவனங்கள் விடுக்கும் இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிடில் அனைத்து ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களையும் அழைத்து போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 அதிகரித்து வரும் பஞ்சு விலை குறித்து தேசிய பருத்தி ஆலோசனைக் குழு உறுப்பினரும், திருப்பூர் நிஃப்ட் டீ கல்லூரி தலைவருமான ராஜா எம்.சண்முகத்திடம் கேட்டபோது, இந்தியாவில் அக்டோபர் மாத பருத்தி விளைச்சல் 2.80 லட்சம் பேல்கள்.

அதே மாதத்தில் இந்திய ஜவுளி நிறுவனங்களின் தேவை 22 லட்சம் பேல்கள். அவ்வாறான சூழ்நிலையில் இந் தியாவில் விளையும் தரமான பருத்திகள் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட போட்டிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுமானல் உள்நாட்டு நிறுவனங்களுக்கான பஞ்சுகள் கிடைக்காமல் அனைத்து ஜவுளி நிறுவனங்களும் ஸ்தம்பிக்கும். தவிர, தரமான பருத்திகள் போட்டி நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பட்சத்தில் உள்நாட்டு ஜவுளி, ஆயத்த ஆடைகளை தரமானதாக க உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படும்.

 அதனால், பருத்தி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தி உள்நாட்டு ஜவுளித்தொழில் நிறுவனங்களுக்கு தரமான பஞ்சு, நூல் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும்   என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com