திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஆந்திரம், குஜராத் வழிகாட்டுகிறது பாதுகாக்கப்படுமா பயனுள்ள பாசனமுறை?

ஈரோடு,ஜூன் 5: விவசாயத்தில் பல்வேறு வகைகளில் நன்மை அளிக்கக்கூடிய சொட்டு நீர்ப் பாசனத்திட்டம், மத்திய, மாநில அரசின் அணுகுமுறைகளால் தமிழகத்திலிந்து காணாமல் போய்விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.     விவ

Updated On :20 செப்டம்பர் 2012, 12:23 pm

ஈரோடு,ஜூன் 5: விவசாயத்தில் பல்வேறு வகைகளில் நன்மை அளிக்கக்கூடிய சொட்டு நீர்ப் பாசனத்திட்டம், மத்திய, மாநில அரசின் அணுகுமுறைகளால் தமிழகத்திலிந்து காணாமல் போய்விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  

  விவசாயத்தை பொறுத்தவரை மிக முக்கியமானது தண்ணீர். இயற்கையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களினால் கடந்த 30 ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக்  குறைந்துவிட்டது. இதனையடுத்து குறைந்த அளவு நீர் ஆதாரத்தினை வைத்து, விவசாயத்தில் நிறைவான பலன்களை பெறவேண்டிய நிர்பந்தம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

 அந்த சமயத்தில் விவசாய தொழில்நுட்ப வல்லுநர்களால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சொட்டு நீர்ப் பாசனத்திட்டம் குறைவான நீர் ஆதாரம் உள்ள விவசாயிகளுக்கு ஓரளவு கைகொடுத்தது.

  சொட்டுநீர்ப் பாசனம் மூலம், விவசாயத்திறகான தண்ணீர் தேவை மற்றும் சாகுபடி செலவு குறைவதோடு, அதிக அளவில் மசசூல் பெறமுடிந்தது. ஆனால் இதற்கான செலவு அதிகமாக இருந்ததால் குறு மற்றும் சிறு விவசாயிகள் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.  இதனால் வங்கிக் கடன், மானியம் உள்ளிட்ட சலுகைகள் மூலமாக இத் திட்டத்தை விவசாயிகளிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி மேற்கொணடது. இருப்பினும் வங்கிக் கடன்

கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், மிகக்குறைவான மானியம் உள்ளிட்டவற்றால் தமிழகத்திóல் இத்திட்டம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

  மஞ்சள், கரும்பு, வாழை ஆகிய பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க தமிழகத்தை பொறுத்தவரை ஹெக்டேருக்கு ரு.1 முதல் ரூ.1.25 லட்சம் வரை செலவாகிறது.  இதில் அரசு ரூ.14,500 மட்டுமே மானியமாக வழங்குகிறது. இதனால் வங்கிக் கடனை எதிர்பார்க்கும் விவசாயிகளுக்கு இத்திட்டம் பயனளிக்கவில்லை. அதே சமயத்தில் பெரிய விவசாயிகளில் பெரும்பாலனவர்கள் தங்கள் நிலங்களில் பழப்

பயிர்களை பயிரிட்டு, சொட்டு நீர்ப் பாசன முறையை பயன்படுத்தி வருகின்றனர்.   குறு, சிறு விவசாயிகள், தண்ணீóர் பற்றாக்குறை காரணமாக கரும்பு, வாழை, மஞ்சள்  பயிர்களை பயிரிட முடிவதில்லை.

  இதுகுறித்து சொட்டு நீர் பாசனத்தை அமைத்துக்கொடுக்கும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் தெரிவித்தது:

ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களில் 90 சத மானியம் வழங்கப்படுகிறது.  மேலும் குஜராத் மாநிலத்தில் புதிதாக விவசாய மின் இணைப்பு கோருபவர்களுக்கு, சொட்டு

நீர்ப் பாசன தொழில்நுட்பம் முழுமையாகச் செயல்படுóத்தப்பட்டுள்ளாதா என்பதை ஆய்வு செய்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

 இத்தகைய ஊக்குவிப்புச் செயல்களை தமிழக அரசு மேற்கொண்டால், சொட்டு நீர்ப்  பாசனத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைய வழிகிடைக்கும் என்றார்.

  இதுகுறித்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கச் செயலர்

தளபதியிடம் கேட்டபோது, சொட்டு நீர்ப் பாசனத்துக்கு கடந்த 1980-ம் ஆண்டில் வழங்கப்பட்ட மானிய அளவே தற்போதும் கணக்கில் கொள்ளப்படுகிறது. குறைவான நீர்வளம் உள்ள பகுதிகளில் விவசாயிகள் வறுமையின் பிடியில் இருந்து மீள்வதற்கு சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் உதவியாக இருக்கும். குறு, சிறு விவசாயிகள் சொட்டு

நீர்ப் பாசனம் அமைத்துக்கொள்ள 100 சத மானியத்தில் வங்கிக் கடன் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  

 பல இலவசத் திட்டங்கள் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 100 சத மானியம் அளிப்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியிட்டு, இந்த சாதனையில் ஆந்திரா மற்றும் குஜாராத் மாநிலங்களை முந்திக்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.