மக்கள் எளிதாக கட்டட அனுமதி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தரை தளம், 2 தளம், 4,000 சதுர அடி வரையிலான தனி குடியிருப்பு மற்றும் தரை தளம், முதல் தளம் மற்றும் 2,000 சதுர அடி வரையிலான தனி வணிகக் கட்டங்களுக்கு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் அனுமதி வழங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஈரோடு உள்ளூர் திட்டக் குழுமத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், உள்ளாட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வை மீறி, விதிகளை முறையாகப் பின்பற்றாமல், கட்டணங்களை முறையாக வசூல் செய்யாமல் கட்டட அனுமதி வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.