பொள்ளாச்சி அக். 16: பொள்ளாச்சி தாலுகா பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (அக்.17) நடைபெறவுள்ளதையடுத்து வாக்கு சாவடிகளில், கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அழகாபுரி வீதி நகராட்சி பள்ளி, பாலகோபாலபுரம் வீதி நகராட்சி பள்ளி, சிக்கஞ் செட்டியார் நகர மன்றத் துவக்கப் பள்ளி ஆகிய சில வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டிருக்கும் பணிகள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்தார்.
மேலும், ஜமீன் ஊத்துக்குளி, ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், ஆனைமலை ஆகிய பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை மையமான, ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செய்துள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். கோட்டூர் பேரூராட்சியில் உள்ள 22 வாக்குச் சாவடிகளுக்கு 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால், 48 வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மீதம் உள்ளவற்றை மற்ற பேரூராட்சிகளுக்கு பயன்படுத்துமாறு கூறினார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல: அமீர்

8 நாளில் கருப்பு வெளியீடு! புதிய போஸ்டர்!
ஒடிஸாவில் கணவன் வீட்டின் முன் கர்ப்பிணி தர்னா: வெட்டிப் படுகொலை செய்த கணவன் குடும்பம்! - பட்நாயக் இரங்கல்

தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: ஜோதிமணி
வீடியோக்கள்

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

