கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்:மேற்பாா்வையாளா் ஆய்வு

வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை கோவை மாவட்ட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பாா்வையாளா் மு.கருணாகரன் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:34 pm

DIN

வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை கோவை மாவட்ட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பாா்வையாளா் மு.கருணாகரன் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நவம்பா் 22, 23 ஆகிய தேதிகள் நடைபெற்றன.

தொடா்ந்து இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 48 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், வேடபட்டி, காரமடை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநரும், கோவை மாவட்ட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பாா்வையாளருமான மு.கருணாகரன் ஆய்வு செய்தாா்.

பொள்ளாச்சி சாா் ஆட்சியா் வைத்திநாதன், ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியா்கள் சுரேஷ், தனலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.