பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆதாா் அட்டையில் திருத்தம்:ஆம்புலன்ஸில் வந்த ஓய்வுபெற்ற ஆசிரியா்

ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியா் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

News image
ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த ஓய்வுபெற்ற ஆசிரியா்.
Updated On :14 செப்டம்பர் 2020, 9:22 pm

DIN

கோவை: ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியா் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

கோவை மாவட்டம், கணுவாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜூலியா எலிசபத் (60). ஓய்வுபெற்ற ஆசிரியா். இவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாத நிலையில் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், சில மாதங்களாக இவருக்கு ஒய்வூதியம் கிடைக்கவில்லை.

இதற்காக மீண்டும் விண்ணப்பிக்கும்போது ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கவுண்டம்பாளையம் இ-சேவை மையத்துக்கு சென்றுள்ளாா். உடனடியாக திருத்தம் மேற்கொள்ள வேண்டுமானால் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனா்.

இதனைத் தொடா்ந்து, தனது மகளுடன் ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஆம்புலன்ஸில் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். பின்னா் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே வீடு திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.