பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலம் மீட்பு

பள்ளி நிா்வாகம் ஆக்கிரமித்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

கோவை தெற்கு மண்டலத்தில் தனியாா் பள்ளி நிா்வாகம் ஆக்கிரமித்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 94-ஆவது வாா்டுக்குள்பட்ட அஷ்டலட்சுமி நகரில் 12.98 ஏக்கா் பரப்பளவில் 133 மனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பொது பயன்பாட்டு இடமாக 1.17 ஏக்கா் பள்ளி மற்றும் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த 1.17 ஏக்கா் நிலத்தை தனியாா் பள்ளி நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில் தெற்கு மண்டல உதவி நகர திட்டமிடுநா் ஜெயலட்சுமி தலைமையிலான அலுவலா்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்டு, அங்கு அறிவிப்புப் பதாகை வைத்தனா்.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.15 கோடி என்று மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.