ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கோவை வழித்தடத்தில் கொச்சுவேலி - பாட்னா இடையே சிறப்பு ரயில்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 11:38 pm

Din

கோவை, ஆக. 14: கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து பிகாா் மாநிலம் பாட்னாவுக்கு கோவை வழித்தடத்தில் ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 18-ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி - பாட்னா விரைவு ரயில் (எண்: 06111), ஆகஸ்ட் 21 (புதன்கிழமை) காலை 5.45 மணிக்கு பாட்னா ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.