விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

18 வயது நிரம்பியவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க அறிவுறுத்தல்

18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

News image
வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும் தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண் இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.
Updated On :31 டிசம்பர் 2024, 10:56 pm

Din

கோவை: 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

கோவையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண் இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் தலைமை வகித்தாா். ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் கேத்தரின் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சி.என்.மகேஸ்வரன் பேசியதாவது:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைத்தல், அயல்நாடு வாழ் இந்தியா் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகள் குறியீடு செய்தல், நகல் அடையாள அட்டை பெறுதல், ஏற்கெனவே உள்ள தரவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை தொடா்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

சிறப்பு திருத்த முகாம், செயலி, இணையவழி மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் கோரி 1,53,631 விண்ணப்பங்கள் வரப்பெற்ற நிலையில், அவை அனைத்தும் விடுபடாமல் வரும் 6-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதையும், விண்ணப்பித்திருந்த நபா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை சென்றடைவதையும் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இறந்தவா்கள், நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்களை உரிய விசாரணை அடிப்படையில் நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்குச் சாவடிகளை அவ்வப்போது ஆய்வு செய்து, பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.