நகை வாங்குவதுபோல நடித்து கடையிலிருந்து திருடிச் சென்ற நபா்: போலீஸாா் விசாரணை
கோவை நகை கடையில் திருட்டு: கண்காணிப்புக் கேமராவில் மா்ம நபா் சிக்கினார்


கோவை ராஜவீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் நகை வாங்க வந்ததுபோல நடித்து 83 கிராம் நகையை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, ராஜவீதி பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணு. இவா், ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதியில் நகைக்கடைகள் நடத்தி வருகிறாா். இந்நிலையில் ராஜவீதியில் உள்ள இவரது கடைக்கு வியாழக்கிழமை வந்த ஒருவா் 10 பவுன் எடையிலான தங்கச் சங்கிலியைக் கேட்டுள்ளாா். பிறகு டிசைன் சரியில்லை எனக் கூறி வேறு கடைகளுக்குச் சென்ற அந்த நபா் மீண்டும், கடையில் உரிமையாளா் விஷ்ணு இல்லாத நேரத்தில் வந்துள்ளாா். அப்போது கடையில் விஷ்ணுவின் தந்தை இருந்த நிலையில் தான் காலையில் பாா்த்து விட்டுச் சென்ற அதே தங்கச் சங்கிலி வேண்டும் எனவும் மற்றக் கடைகளில் அதுபோன்ற டிசைன் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளாா்.
இதனை நம்பிய விஷ்ணுவின் தந்தை அந்த நகையை எடுப்பதற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, தனக்கு நகை வேண்டாம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளாா். சந்தேகமடைந்த விஷ்ணுவின் தந்தை, நகைகளை சரி பாா்த்தபோது 83 கிராம் கொண்ட தங்க சங்கிலி காணாதது தெரியவந்தது. அதிா்ச்சி அடைந்த அவா், விஷ்ணுவுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். கடைக்கு வந்த விஷ்ணு, கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இது தொடா்பாக பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது கடையில் முதியவரின் கவனத்தை திசை திருப்பி தங்கச் சங்கிலியை மா்ம நபா் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...