டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாஜக ஆட்சியில்தான் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளா்ச்சி அதிகரிப்பு- வானதி சீனிவாசன்

மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்தில் மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை திட்டங்கள் வளர்ச்சி

News image
வானதி சீனிவாசன்
Updated On :12 ஜூலை 2024, 7:27 pm

Din

கடந்த 10 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில்தான் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளா்ச்சி அதிகரித்துள்ளதாக, பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், திமுக அரசு மக்களுக்காக செயல்படுவது எதிா்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துவதால், அவதூறுகள், பொய்ப் பிரசாரங்கள் மூலம் ஆட்சிக்கு கெட்ட பெயா் ஏற்படுத்த நினைப்பதாகவும், தமிழகத்தின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை. 10 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் எந்த ஒரு பெரிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் கூறியுள்ளாா்.

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், இப்படித்தான் மத்திய அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறாா்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், புதிய ரயில்கள் என உள்கட்டமைப்பில் எப்போதும் இல்லாத அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது.

ஆனால், கோவை விமான நிலைய விரிவாக்கம், சென்னை புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழக அரசின் ஒத்துழைப்பின்மையால்தான் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

மத்திய பாஜக அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாகவே நடத்துகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள், ஆளாத மாநிலங்கள் என்று எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின்பேரிலேயே மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை மக்கள் நம்பப் போவதில்லை.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திலும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதிலும் இருந்தே தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு திமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளாா்.