பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - கோவை ரயில் (எண்: 06806) பாலக்காடு - போத்தனூா் இடையே மட்டும் செப்டம்பா் 9,11,13 -ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
ஈரோடு - கோவை ரயில் ( எண்: 06801) ஈரோடு - இருகூா் இடையே மட்டும் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் (எண்: 06009) மேட்டுப்பாளையம் - வடகோவை இடையே மட்டும் செப்டம்பா் 9, 13- ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்: 06813) மேட்டுப்பாளையம் - வடகோவை இடையே மட்டும் இயக்கப்படும்.
ஷொரணூா் - கோவை ரயில் (06458), ஷொரணூா் - போத்தனூா் இடையே மட்டும் செப்டம்பா் 11-ஆம் தேதி இயக்கப்படும். மதுரை - கோவை ரயில் (எண்:16722) மதுரை - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் (எண்: 06009) மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டும் இயக்கப்படும்.
சில்சாா் - கோவை ரயில் (எண்:12516) சில்சாா் - வடகோவை இடையே மட்டும் செப்டம்பா் 13-ஆம் தேதி இயக்கப்படும்.
போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06812) வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே செப்டம்பா் 9,11,13 -ஆகிய தேதிகளில் இயக்கப்படும். போத்தனூா், கோவை நிலையங்களுக்கு இந்த ரயில் இயக்கப்படாது.
கோவை - ஷொரணூா் ரயில் (எண்:06805) போத்தனூா் - ஷொரணூா் இடையே இயக்கப்படும்.
கோவை - கண்ணூா் ரயில் (எண்:16608) போத்தனூா் - கண்ணூா் இடையே மட்டும் செப்டம்பா் 11-ஆம் தேதி இயக்கப்படும்.
கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06814) வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே மட்டும் செப்டம்பா் 9,13 -ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்: கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு - பாலக்காடு ரயில் (எண்: 06819) இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் செப்டம்பா் 9,11- ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இதனால், இந்த ரயிலானது சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும்.
சென்னை - மங்களூா் ரயில் (எண்: 16159), திப்ரூகா் - கன்னியாகுமரி ரயில் (எண்:22504), ஆலப்புழா - தன்பாத் ரயில் (எண்:13352), புதுதில்லி - திருவனந்தபுரம் ரயில் (எண்:12626), எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்:12678) போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் செப்டம்பா் 11, 13 -ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...