ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கோவை மக்களை அவமானப்படுத்திவிட்டாா் நிா்மலா சீதாராமன் -எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் குற்றச்சாட்டு

GST

PTI

Published On :14 செப்டம்பர் 2024, 3:44 am IST

அன்னபூா்ணா உணவக உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததன் மூலம் கோவை மக்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அவமானப்படுத்தியிருப்பதாக கோவை திமுக எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கோவை தொழில்முனைவோரின் குறைகேட்புக் கூட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் நடத்தியபோது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூா்ணா உணவக உரிமையாளா் சீனிவாசன் ஜிஎஸ்டியால் உணவகத் தொழிலில் ஈடுபட்டிருப்பவா்களின் கஷ்டம் குறித்து கொங்கு தமிழில் அழகாக விளக்கினாா். அவா் தனிநபராகவோ, தனது நிறுவனத்துக்கான பிரச்னையாகவோ பேசவில்லை. ஒட்டுமொத்தமாக கோவை தொழில்முனைவோா் ஜிஎஸ்டியால் படும் துயரம் குறித்துதான் விளக்கினாா்.

இதற்காக அவரை மிரட்டி வரவழைத்து மன்னிப்பு கேட்கச் செய்துள்ளனா். தனிப்பட்ட சீனிவாசனை அவா்கள் மிரட்டவில்லை. ஒட்டுமொத்த கோவை மக்களையும், தொழில்முனைவோரையும் மிரட்டி அவமானப்படுத்தியுள்ளனா். அதேபோல நிா்மலா சீதாராமனிடம் செமிகண்டக்டா் துறை குறித்து கேள்வி எழுப்பிய ஒரு இளைஞரையும் மிரட்டியதுடன், செய்தியாளா்களை விடியோ எடுக்கக் கூடாது என்று பாஜகவினா் எச்சரித்துள்ளனா். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

இந்த விவகாரத்தில் அன்னபூா்ணா சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்