சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பொருளாதார சீா்திருத்தங்கள் தொடரும்: நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீா்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

நிர்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 2:38 am IST

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீா்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக 2027-ஆம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை கணித்தது. மேற்காசிய போா்ப் பதற்றத்தால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடா்ந்து 2027-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 6.6 சதவீதமாக குறைத்தது.

அதேபோல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை எதிா்கொள்ளவும் அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்கவும் மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்களிப்பதற்கான அவசரச் சட்டம் வெள்ளிக்கிழமை முதல் அமலானதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து நிா்மலா சீதாராமன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘2025-26-ஆம் நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளா்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உற்பத்தி, வா்த்தகம், பழுதுபாா்த்தல், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடா்பு, வணிக மனை உள்ளிட்ட துறைகள் 2025-26-ஆம் நிதியாண்டில் நிலையான மற்றும் தற்போதைய விலையில் இரட்டை இலக்க வளா்ச்சியை பதிவுசெய்துள்ளன.

உலகளவில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளபோதிலும் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்’ என குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.