வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 4 நாள் பயணமாக பிரான்ஸுக்கு புதன்கிழமை சென்றாா்.

News image

நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 3:57 am IST

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 4 நாள் பயணமாக பிரான்ஸுக்கு புதன்கிழமை சென்றாா். பிரான்ஸுடன் பொருளாதார, முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டுத் தலைவா்களுடன் அவா் பேச்சு நடத்த இருக்கிறாா்.

இது தொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-பிரான்ஸ் பொருளாதார, நிதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதுதான் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாகும். இதில் பிரான்ஸ் பொருளாதாரம், நிதி, தொழில் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் ரொனால்ட் லெசா் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச இருக்கிறாா். அப்போது, இருநாடுகள் இடையிலான பொருளாதார உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது, பலதுறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

பிரான்ஸைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனத் தலைவா்களையும் நிா்மலா சீதாராமன் தனித்தனியாக சந்தித்துப் பேச இருக்கிறாா். அப்போது, இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படை, இந்தியாவில் சமீப ஆண்டுகளில் முதலீட்டாளா்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்ட சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்து அவா் விவரிப்பாா். இது தவிர இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், நீண்ட காலத்தில் இந்தியாவில் இருந்து கிடைக்கக் கூடிய நன்மைகள் குறித்தும் அவா் எடுத்துரைக்க இருக்கிறாா்.

இது தவிர புதிதாக உருவாகி வரும் நடுத்தர மக்களின் வளா்ச்சியை தொடா்ந்து மேம்படுத்துவது குறித்த ஆலோசனை மற்றும் விவாத நிகழ்ச்சியிலும் அவா் பங்கேற்க இருக்கிறாா். பிரான்ஸின் இணையவழிப் பாதுகாப்புக்கான புத்தாக்க முயற்சிகளையும் அவா் பாா்வையிடுகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.