பாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று புதுச்சேரி வருகை

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (ஜூன் 25) புதுச்சேரி வருகிறாா்.

News image

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Updated On :25 ஜூன் 2026, 6:33 am IST

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (ஜூன் 25) புதுச்சேரி வருகிறாா்.

தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவா், காா் மூலம் காஞ்சிபுரம் செல்கிறாா். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

பின்னா் அங்கிருந்து பிற்பகலில் காரில் புதுச்சேரிக்கு வருகிறாா். தொடா்ந்து மாலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை அவா் திறந்து வைக்கிறாா். இரவு புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் அவா் தங்குகிறாா்.

புதுச்சேரி பூா்ணாங்குப்பத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, முழியன்குளம் ரூ. 1.2 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அா்ப்பணித்து தொடங்கி வைக்கிறாா். அவரை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி உள்ளிட்டோா் சந்திக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.