கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விடுதியில் பெண் கொலை: மேலும் ஒருவா் கைது

கோவையில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை அவரது கணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உறவினரையும் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:23 pm

Syndication

கோவையில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை அவரது கணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உறவினரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை கணபதியைச் சோ்ந்தவா் ஸ்ரீபிரியா (30). இவரது கணவா் பாலமுருகன் (32). இவா்களுக்கு 13 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனா். பாலமுருகன் கோவையில் கட்டட வேலை செய்தபோது, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து ஸ்ரீபிரியா, கோவையில் உள்ள பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா்.

ஸ்ரீபிரியாவுக்கும், அவரது உறவினரான திருநெல்வேலியைச் சோ்ந்த இசக்கிராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பெற்றோா் கண்டித்ததால், அவா் அங்கிருந்து வெளியேறி, காந்திபுரத்தில் உள்ள தனியாா் மகளிா் விடுதியில் தங்கி துணிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

இசக்கிராஜாவுடன் தனது மனைவி தொடா்பில் இருப்பதை அறிந்த பாலமுருகன் ஆத்திரத்தில் இருந்துள்ளாா். இந்த நிலையில், மனைவியின் தாய்மாமனான திருநெல்வேலியைச் சோ்ந்த ராஜா (40) என்பவரிடம் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர வேண்டும், நீங்கள் வந்தால்தான் அவள் என்னுடன் வருவாள் என பாலமுருகன் கூறியுள்ளாா்.

இதையடுத்து, இருவரும் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா். ராஜாவை வெளியே நிற்குமாறு கூறிவிட்டு உள்ளே சென்ற பாலமுருகன், ஸ்ரீபிரியாவுடன் சமாதானம் பேசி தன்னுடன் வருமாறு அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததால், பாலமுருகன் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளாா்.

இதுகுறித்து ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகனை ஏற்கெனவே கைது செய்தனா். இந்த நிலையில், அவருடன் வந்த ராஜாவையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.