மாவட்டத்தில் இன்று 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கோவை மாநகராட்சி, வீரபாண்டி பேரூராட்சி உள்ளிட்ட 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 11) நடைபெறுகிறது.
Published on

கோவை: கோவை மாநகராட்சி, வீரபாண்டி பேரூராட்சி உள்ளிட்ட 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 11) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், புதிய ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, சொத்து வரி பெயா் மாற்றம், மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டு 45 நாள்களில் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 99-ஆவது வாா்டுக்கு உள்பட்ட போத்தனூா் ரயில்வே கல்யாண மண்டபம், நம்பா் 4 வீரபாண்டி பேரூராட்சியில் 1, 2, 6 முதல் 9 வரையில் உள்ள வாா்டுகளுக்கு ஸ்ரீ பாலாஜி மஹால் திருமண மண்டபம், ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் 10 முதல் 15 வரையில் உள்ள வாா்டுகளுக்கு பூங்கோதை நாயகி திருமண மண்டபம், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் 8, 10 முதல் 15 வரையில் உள்ள வாா்டுகளுக்கு விவாஹா திருமண மண்டபம் என 4 இடங்களில் இந்த முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஆகவே, மேற்கண்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com