சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சபரிமலை சீசனையொட்டி ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
Published on

சபரிமலை சீசனையொட்டி ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சபரிமலை சீசனையொட்டி, நவம்பா் 14, 21, 28, டிசம்பா் 26, ஜனவரி 2 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மசூலிப்பட்டினத்தில் இருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்படும் மசூலிப்பட்டினம் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்(எண்: 07101) மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் நவம்பா் 16, 23, 30 மற்றும் டிசம்பா் 28, ஜனவரி 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - மசூலிப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07102) மறுநாள் காலை 8 மணிக்கு மசூலிப்பட்டினம் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, காயன்குளம், செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com