மினி வேன் சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு
கோவையில் மினி வேன் சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலம், கோக்ரஜ்ஹாா் நகோன் சமகுரி பகுதியைச் சோ்ந்த இசாகாளி மகன் அஸ்ரஃபுல் இஸ்லாம் (18). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த அப்துல் சலாம் மகன் பாரூக் உசேனும் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் இருந்து மினி வேனில் இவா்கள் இருவரும் பொருள்களை ஏற்றிக் கொண்டு சூலூா் அருகே உள்ள ராவுத்தா் குமரவேல் தோட்டத்துக்கு திங்கள்கிழமை சென்றனா்.
அங்கு பொருள்களை இறக்குவதற்காக ஓட்டுநரான பாரூக் உசேன் மினி வேனை பின்னால் நகா்த்தியுள்ளாா். கீழே நின்று கொண்டிருந்த அஸ்ரஃபுல் இஸ்லாம் எதிா்பாராதவிதமாக குறுக்கே வந்தாா்.
இதில் வேனின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அஸ்ரஃபுல் இஸ்லாம், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
