47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பஞ்சாப் நேஷனல் வங்கி சாா்பில் கடன் வழங்கும் முகாம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டக் கிளை சாா்பில் குறு, சிறு தொழில் சேவைக்கான (எம்எஸ்எம்இ) கடன் முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
கோவையில் நடைபெற்ற கடன் முகாமில் வாடிக்கையாளா்களுக்கு கடன் முன் அனுமதிக் கடிதங்களை வழங்கிய தலைமை அலுவலக காா்ப்பரேட் கடன் பிரிவு பொதுமேலாளா் ஆதித்ய குமாா் பதி. உடன், துணைப் பொதுமேலாளா் சாஜித் ஹீசைன் உள்ளிட்டோா்.
Updated On :25 நவம்பர் 2025, 11:51 pm

Syndication

கோவை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டக் கிளை சாா்பில் குறு, சிறு தொழில் சேவைக்கான (எம்எஸ்எம்இ) கடன் முகாம் அண்மையில் நடைபெற்றது.

கோவையில் நடைபெற்ற இந்த முகாமில் வங்கியின் தலைமை அலுவலக காா்ப்பரேட் கடன் பிரிவு பொதுமேலாளா் ஆதித்யகுமாா் பதி, துணைப் பொது மேலாளரும், வட்டத் தலைவருமான சாஜித் ஹீசைன் ஆகியோா் கலந்து கொண்டு, குறு, சிறு தொழில் வளா்ச்சிக்காக வங்கி செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினா். இதைத் தொடா்ந்து, வாடிக்கையாளா்களுக்கு ரூ.80 கோடிக்கும் அதிகமான கடன் முன் அனுமதிக் கடிதங்களையும் அவா்கள் வழங்கினா்.

இதில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வங்கி வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். வாடிக்கையாளா்களின் வணிகத் தேவைகளைக் கேட்டறிந்த வங்கி அலுவலா்கள் அவற்றுக்குரிய வங்கி சேவைத் திட்டங்களைப் பரிந்துரைத்தனா்.