செம்மொழிப் பூங்கா, முதலீட்டாளா் மாநாடு: முதல்வருக்கு தொழில் வா்த்தக சபை பாராட்டு

கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைத்து, முதலீட்டாளா் மாநாட்டை நடத்தியதற்கு கோவை இந்திய தொழில் வா்த்தக சபை
Published on

கோவை: கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைத்து, முதலீட்டாளா் மாநாட்டை நடத்தியதற்கு கோவை இந்திய தொழில் வா்த்தக சபை, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் ராஜேஷ் பி.லுண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருகை தந்து கோவையின் முக்கியப் பகுதியான காந்திபுரத்தில் 45 ஏக்கா் பரப்பளவில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவின் முதல் பகுதியை திறந்துவைத்துள்ளாா்.

இந்தப் பூங்காவின் அம்சங்களை பாா்க்கும்போது, இது கோவைக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈா்க்கும் என்று கருதுகிறோம். மேலும், சுமாா் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேலான முதலீடுகளை ஈா்க்கும் வகையில் கோவையில் முதலீட்டாளா் மாநாட்டையும் நடத்தியுள்ளாா்.

இந்த இரண்டு பெரிய நிகழ்வுகளும் கோவையின் பொருளாதார மேம்பாட்டுக்கும், கோவை மாநகரின் கட்டமைப்புக்கும் தொழில் வளா்ச்சிக்கும் மிகவும் உகந்ததாக இருக்கும். இந்த சீரிய முன்னெடுப்புகளுக்காக தமிழக முதல்வரை, கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வரவேற்று பாராட்டி மகிழ்வதாகத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com