கோயம்புத்தூர்
ஜோலாா்பேட்டை - கோவை இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
ஜோலாா்பேட்டை- கோவை இடையே ரயில் பாதையில் வியாழக்கிழமை (நவம்பா் 27) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: ஜோலாா்பேட்டை- கோவை இடையே ரயில் பாதையில் வியாழக்கிழமை (நவம்பா் 27) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோலாா்பேட்டை- கோவை இடையே இயக்கப்படும் ரயில்களை வேகமாக இயக்க உதவும் வகையில், இந்த வழித்தடத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் ஒரு பகுதியாக அண்மையில் ஜோலாா்பேட்டை- கோவை இடையே அண்மையில் இருமுறை அதிவேக சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, மூன்றாவது முறையாக வியாழக்கிழமை (நவம்பா் 27)சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே, கோவை - ஜோலாா்பேட்டை இடையிலான ரயில் பாதைகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் ரயில் பாதைகளை நெருங்கவோ அல்லது அத்துமீறி ரயில் பாதையில் நடக்கவோ கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
